Posts

Showing posts from June, 2022

ஜெயமோகன் திருப்பூர் கட்டண உரை தொகுப்பு - நினைவிலிருந்து எடுத்தல்

            ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய கட்டண உரை திருப்பூரில் 10-Apr-2022 ( ஞாயிறு ) அன்று நடைபெற்றது . “ கல்தூணும் கனிமரமும் - பண்பாட்டையும் மதத்தையும் பெற்றுக்கொள்ளுதல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் இரண்டு மணி நேரம் ( தோராயமாக ) உரையாற்றினார் . அந்த உரை பதிவு செய்யப்படவில்லை . ஆகவே அதன் சாராம்சத்தை மறக்காமல் இருக்க நினைவிலிருந்து மீட்டெடுத்து பதிவு செய்கிறேன் . இது எழுத்தாளரின் கருத்தை நான் புரிந்து கொண்டது . தவறான புரிதல் இருப்பின் சுட்டி காட்டவும் . இக்கட்டுரையில் நான், எனது என குறிப்பிடுவது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை, என்னை அல்ல, ஒரு கோர்வைக்காக அவர் உரையை அவ்வாறே தொகுக்கும் முயற்சி. பகுதி - 1 ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் எது சிறந்த கலை என கூற முடியுமா , அது ஒரு சீண்டலான கேள்வி . அது எப்படி கூற முடியும் , ஒரு சிறந்த ஓவியத்தை பார்க்கும்போது அதுதான் சிறந்தது என தோன்றும் . இலக்கியத்தால் அவ்விடத்தை அடைய முடியாதென தோன்றும் . அதேபோல ஒரு சிறுகதை   அல...